சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து
சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் குறுலிங்காபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் பெருமாள்(வயது47). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அதேபகுதியில் அமைந்துள்ளது.
அங்கு சுமார் 150 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று தனித்தனி அறையில் வேலை நடைபெற்று வந்தது. மாலையில் குச்சிகளில் மருந்து சேர்க்கும் பணியை 6 பேர் செய்து வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அறையில் வைத்திருந்த கழிவு குச்சியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பிடித்தது. அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும் தீ வேகமாக பரவி அங்கிருந்த கழிவு குச்சி மூடைகள் அனைத்திலும் பரவியது. இதுகுறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை மேற்கொண்டார்.

Related Tags :
Next Story