குளித்தலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி


குளித்தலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடந்தது.

குளித்தலை,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டி குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிரு‌‌ஷ்ணன் தொடங்கிவைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்தார்.

காற்று மாசுபாட்டை குறைத்தல் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் குளித்தலை கல்வி மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளில் படிக்கும் 134 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பரிசுகள்

போட்டிகள் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் என மூன்று பிரிவில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் இப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, பள்ளி பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் வாசுகி, கல்வி, தொலைக்காட்சி, ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story