மாவட்ட செய்திகள்

வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு + "||" + As the address asks Flush jewelry ot woman

வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே வெளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 50). விவசாயி. இவரது மனைவி சந்திரகலா (48). நேற்று முன்தினம் மாலை சந்திரகலா தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை பஜார் வீதிக்கு சென்று வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சந்திரகலாவை வழிமறித்து கீழானூர் செல்வதற்கு வழி கேட்டனர்.

சந்திரகலா அவர்களுக்கு வழி கூறி கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் சந்திரகலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி சென்று விட்டார்கள்.

இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் சந்திரகலா புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கழுத்தில் இருந்து நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.54¾ லட்சம் தங்கம் பறிமுதல்; ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர். ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
2. திருச்சி விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3. திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
4. கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.17½ லட்சம் தங்கம் பறிமுதல்
கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.17½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
5. காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் தங்கம் வென்றார்
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது.