கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலரும் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வி.பி.கந்தசாமி வெற்றிக்காக பாடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மகத்தான வெற்றி பெற இந்த கூட்டம் சூளுரைக்கிறது.

70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததற்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை பெற்று தந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வந்தால், மு.க.ஸ்டாலினை கண்டித்து கோவை மாவட்டம் முழுவ தும் ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story