பந்தலூர் அருகே சகதியாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதி
பந்தலூர் அருகே பத்து லைன்ஸ் பகுதிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1-ல் பத்து லைன்ஸ் பகுதி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளப்பள்ளி அல்லது அய்யன்கொல்லி பஜாருக்கு தான் சென்று வர வேண்டும்.
இந்த நிலையில் பத்து லைன்ஸ் பகுதியை ஒட்டி அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் காணப்படும். காட்டு யானைகள் இரவில் வீடுகளை முற்றுகையிட்டு சேதப்படுத்துவதுடன், பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. இதன்காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியது உள்ளது.
இந்த பத்துலைன்சில் இருந்து காவயல் பகுதிக்கு இணைப்பு சாலை செல்கிறது. சுமார் 1 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலை தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இந்த சாலை சேறும், சகதியாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த சாலையில் பதிக்கப்பட்டு உள்ள சோலிங்கற்களும் பெயர்ந்து காணப்படுகின்றன.
இதனால் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தனியார் வாகனங்கள் எதுவும் இங்கு வருவது இல்லை.
இந்த சாலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் வேகமாக இயக்க முடிவது இல்லை. மெதுவாக வாகனங்கள் செல்லும்போது காட்டு யானைகள் வழிமறித்து தாக்கும் அபாயம் உள்ளது. பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் தினமும் 6 கி.மீட்டர் தூரம் உள்ள கொளப்பள்ளி, அய்யன்கொல்லிக்கு சென்று படித்து வருகின்றனர்.
வாகன வசதி இல்லாததால் மாணவர்களும் ஆபத்தான நிலையில் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மோசமாக காட்சி அளிக்கும் இந்த சாலையை, தரமான சாலையாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story