ராமநாதபுரத்தில் டிரைவரை நடுரோட்டில் வழிமறித்து வெட்டிய கும்பல்; 8 பேருக்கு வலைவீச்சு
ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக டிரைவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓடஓட விரட்டி கொலை செய்ய முயன்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வைகைநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அசோக் (வயது 30). டிரைவரான இவர் பழைய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வசிக்கும் இவரது உறவினர் விஜயனுக்கும், வீரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனை கண்ட அசோக் இருவரையும் விலக்கி விட்டுள்ளார். இதனால் வீரமணிக்கு, அசோக் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்தநிலையில் அசோக் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓம்சக்திநகர் பகுதியில் உள்ள சாலையில் வந்தபோது வீரமணி, விக்கி, வின்சென்ட், சோத்தூரணி ஜெகதீசன், காமாட்சி, சிவஞானபுரம் ஜெகதீசன், ஜோதி, வெங்கடேஷ் ஆகியோர் வழிமறித்தனர்.
இதை யடுத்து அசோக் தப்பியோடினார். ஆனால் அவரை ஓட,ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த அசோக் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வீரமணி, விக்கி உள்பட 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். நடுரோட்டில் டிரைவரை ஓடஓட விரட்டி வெட்டிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Related Tags :
Next Story