மாவட்ட செய்திகள்

சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர் + "||" + Continue the romance with the brothers wife, man killed the brother

சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்

சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்
சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணனையே தீர்த்துக்கட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. இதுதொடர்பாக அவரையும், அவருடைய அண்ணியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே முசுண்டப்பட்டி- துவரங்குறிச்சி சாலையில் ஒரு பாலத்தின் கீழே ஆண் பிணம் கிடப்பதாக புழுதிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கு கிடந்த உடலை மீட்டு பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 40) என்பதும், கொத்தனாராக அவர் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.


இது குறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகையா சாவுக்கான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் முருகையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

முருகையாவின் மனைவி மணிமேகலைக்கும் (36), முருகையாவின் தம்பி பிச்சமணிக்கும் (34) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து தெரிய வந்ததால் முருகையா தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

முருகையா உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என்று கருதி, அவரை தீர்த்்துக்கட்டும் சதித்திட்டத்தை மணிமேகலையும், பிச்சமணியும் தீட்டியதாக தெரியவருகிறது. அண்ணியுடனான கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணன் என்றும் பாராமல் முருகையாவின் கழுத்தை நெரித்து பிச்சமணி கொன்றதாகவும் தெரியவருகிறது. பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிவந்து, ரோட்டோரம் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் போட்டுச் சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து பிச்சமணி, மணிமேகலையை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட முருகையாவுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை கொலை செய்யப்பட்டதாலும், தாயார் ஜெயிலில் அடைக்கப்பட்டதாலும் அந்த 4 பிள்ளைகளும் பெற்றோரை பிரியும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்
சேலம் அருகே தனியார் கிரானைட்டில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் துப்பு துலங்கியது. நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. வடமதுரை அருகே பயங்கரம், கள்ளக்காதல் தகராறில் வாலிபர் காருடன் எரித்துக் கொலை
வடமதுரை அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
3. கடலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை, 6 ஆண்டுகளுக்கு பிறகு மீனவரின் உடல் தோண்டி எடுப்பு - மனைவி, கொழுந்தன் கைது- பரபரப்பு வாக்குமூலம்
கடலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, கொழுந்தனுடன் கைது செய்யப்பட்டார்.
4. ‘உல்லாசத்திற்கு வரமறுத்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்’ கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
‘உல்லாசத்திற்கு வரமறுத்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்‘ என்று கைதான கட்டிட தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
5. தாராபுரம் அருகே பரபரப்பு: கள்ளக்காதலியுடன் சேர்ந்து வி‌ஷம் குடித்த வாலிபர் சாவு
தாராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.