மாவட்ட செய்திகள்

தங்கை உறவுமுறை கொண்டமைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்புவாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை + "||" + Having a sister relationship Refusing to marry after falling in love with a minor girl The plaintiff filed a police investigation

தங்கை உறவுமுறை கொண்டமைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்புவாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை

தங்கை உறவுமுறை கொண்டமைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்புவாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை
பெல்தங்கடி தாலுகாவில், தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் பூஜாரி(வயது 29). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தங்கை உறவுமுறை கொண்ட 17 வயது நிரம்பிய ஒரு மைனர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரசாத் பூஜாரி அந்த மைனர் பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அந்த மைனர் பெண் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரசாத் பூஜாரியிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பிரசாத் பூஜாரி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மைனர் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் இதுபற்றி உப்பினங்கடி போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் பிரசாத் பூஜாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.