சதுரகிரி மலையில் வெளிநாட்டுக்காரர் ஏற்படுத்திய பரபரப்பு


சதுரகிரி மலையில் வெளிநாட்டுக்காரர் ஏற்படுத்திய பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jun 2019 4:45 AM IST (Updated: 17 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி மலைக்கு சென்று வந்த நியூசிலாந்து நாட்டுக்காரரால் பரபரப்பு உருவானது.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

தற்போது பவுர்ணமியையொட்டி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த சுமார் 50 வயதுடைய ஒருவர் கோவிலுக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அங்கேயே தங்கி நேற்று காலையில் கோவிலில் இருந்து கீழே இறங்கி அடிவாரமான தாணிப்பாறைக்கு வந்துள்ளார்.

வெளிநாட்டுக்காரர் வந்ததைப்பார்த்ததும் அவரை சிலர் போட்டோ எடுக்க முயற்சித்துள்ளனர். உடனே அவர் முகத்தை மறைத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு உருவானது.

மேலும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிலர், அதுகுறித்து தாணிப்பாறையில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வெளிநாட்டுக்காரரை அழைத்து விசாரித்தபோது, ஆராய்ச்சி செய்ய வந்துள்ளதாக கூறியதோடு முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். பின்னர் போலீசார் அவரிடம் விசாரித்த போது, பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார்.

நீண்ட நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் அவரை செல்ல போலீசார் அனுமதித்ததை தொடர்ந்து, அவர் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி வத்திராயிருப்பை நோக்கி சென்றுவிட்டார்.

Next Story