ஏ.டி.எம். கார்டு தகவல்களை கேட்டு வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி


ஏ.டி.எம். கார்டு தகவல்களை கேட்டு வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 17 Jun 2019 3:30 AM IST (Updated: 17 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கார்டு தகவல்களை கேட்டு வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தானே,

தானேயை சேர்ந்தவர் ஓம்கார் (வயது28). இவர் விடுமுறையை கோவாவில் கழிப்பதற்காக அங்குள்ள ஓட்டலில் ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்து இருந்தார்.

இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று அறை முன்பதிவு செய்ததை ரத்து செய்ய விரும்பினார். எனவே அவர் இதுதொடர்பாக அறை முன்பதிவு செய்த ஆன்லைன் புக்கிங் நிறுவன இலவச எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசியவர் ஓம்காரின் ஏ.டி.எம். கார்டு விவரத்தை கேட்டார். கார்டு விவரத்தை கூறினால் தான் அறை முன்பதிவு செய்ததற்கான பணத்தை திருப்பி அனுப்ப முடியும் என கூறினார். இதை நம்பிய ஓம்கார் அந்த நபரிடம் ஏ.டி.எம். கார்டு விவரங்களை தெரிவித்தார்.

இந்தநிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1¼ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஏ.டி.எம். கார்டை பிளாக் செய்தார். மேலும் சம்பவம் குறித்து கடக்பாடா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

Next Story