கயாவில் சேலம் பெண் பலி: உடலை கொண்டு வர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


கயாவில் சேலம் பெண் பலி: உடலை கொண்டு வர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Jun 2019 4:45 AM IST (Updated: 17 Jun 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

கயாவில் வெயில் கொடுமையால் இறந்த பெண்ணின் உடலை சேலத்திற்கு கொண்டு வர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன். இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி என்கிற ராணி (வயது44). கணவன், மனைவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 30 பேர் கடந்த 10-ந்தேதி வடமாநிலங்களுக்கு புனித பயணம் செல்வதற்காக ஒரு சொகுசு பஸ்சில் சென்றனர்.

இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். ேமலும் புனித ஸ்தலங்களுக்கும் சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் கயாவிற்கு சென்றனர். அப்போது அங்கு அதிக வெயில் அடித்ததாக கூறப்படுகிறது.

வெயில் கொடுமை தாங்க முடியாமல் ராணி திடீரென்று மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது கணவர் மற்றும் உடன் சென்றவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கயா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராணி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ராணியின் உடலை விமானம் மூலம் சேலத்திற்கு கொண்டு வருவதற்காக ஒரு ஆம்புலன்சு வேனில் வாரணாசி விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் ராணியின் இறப்பு சான்றிதழ் இருந்தால் தான் உடலை விமானத்தில் ஏற்ற முடியும் என்று கூறினர். அவர்களிடம் ராணியின் இறப்பு சான்றிதழ் இல்லை. இதனால் ராணியின் உடல் சேலத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையொட்டி சேலத்தில் உள்ள ராணியின் மகன்கள் மாதேஸ்வரன், கோபி மற்றும் இவர்களது உறவினர்கள் ஏராளமானவர்கள் கயாவில் இறந்து போன ராணியின் உடலை சேலத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று இரவு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, புனித பயணம் மேற்கொண்ட ராணி வெயில் தாங்க முடியாமல் கயாவில் இறந்து போனார். இறப்பு சான்றிதழ் இல்லை என்று கூறி அவரது உடலை சேலத்திற்கு கொண்டு வர வாரணாசி விமான நிலைய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். எனவே ராணியின் உடலை சேலத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி உள்ே்ளாம் என்று கூறினர்.

இதையொட்டி முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் தாசில்தார் மாதேஸ்வரன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் ரோகிணியின் உத்தரவின் பேரில் ராணியின் உடல் சேலத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்ைகயும் எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையொட்டி அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story