இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள்
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து இஸ்ரோ நிறுவன தலைவர் கே.சிவன் கூறியிருக்கிறார்.
2019
சந்திரனை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான்-2’ செயற்கைக்கோள் ஜூலை 15-ந் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இது செப்டம்பர் மாதம், நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்கி, நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
2020
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து, சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும், காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
2021 (ஜூலை)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்)
ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
2023
வீனஸ் கிரக ஆராய்ச்சி
2030
ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண்வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்’’, என இஸ்ரோ நிறுவன தலைவர் கே.சிவன் கூறியிருக்கிறார்.
இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது.
இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.
இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.
Related Tags :
Next Story