மாவட்ட செய்திகள்

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் + "||" + 2144 Teachers in Tamil Nadu Schools

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிகளில் பணியாற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. அந்தவகையில் தற்போது முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2144 பேர் பணிவாய்ப்பு பெற உள்ளனர்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-7-2019 அன்று 57 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

கல்வித்தகுதி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அத்துடன் பி.எட். படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும். அதேசமயம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.பி.எட் இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அதிகபட்சமாக எம்.பி.எட். முதுகலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும்.

கட்டணம்

பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500-ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். அதே சமயம் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் ஆகியோர் ரூ.250-ஐ கட்டணமாக செலுத்தினால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன், ஆப்லைன் முறைகளில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள், http://www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தை திறந்து, ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்பதால், கவனமாக விண்ணப்பிப்பது சிறந்தது.

தேர்வு முறை

விண்ணப்பிப்பவர்களுக்கு கணினி சார்பான தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி: 24-6-2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-7-2019.

ஆசிரியரின் தேர்வுகள்...