ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு சுரங்க நிறுவனத்தில் வேலை
சுரங்க நிறுவனத்தில் 2482 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். வடக்கு மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது வெல்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் மற்றும் மோட்டார் மெக்கானிக் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தம் 2482 பேர் பணிவாய்ப்பு பெற உள்ளனர்.
பிரிவு வாரியாக உள்ள காலியிட விவரம் : வெல்டர்: 162, எலக்ட்ரீசியன்: 1260, பிட்டர்: 840, மோட்டார் மெக்கானிக்: 220. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்க்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 30-9-2018 அன்று, 16 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பணிவாய்ப்பிற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்களும், 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ‘ஸ்டேஜ்-1’ விண்ணப்ப முறையை பூர்த்தி செய்யவேண்டும். இதற்கு பின்னர் ‘ஸ்டேஜ்-2’ விண்ணப்ப முறையையும் பூர்த்தி செய்து, முழுமைப்பெற்ற விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-7-2019.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nclcil.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story