தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்றார். அப்போது அவருடன் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளராக இருப்பவர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே. இவர் நேற்று தஞ்சை வண்ணாந்துறை பகுதியை சேர்ந்த பொது மக்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென கார்த்திக்ராவ் போன்ஸ்லே தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன் றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது கார்த்திக்ராவ்போன்ஸ்லேவுடன் வந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து கார்த்திக்ராவ்போன்ஸ்லே கூறுகையில், “தஞ்சை கீழவாசல் வண்ணாந்துறை பகுதியில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் 40 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து தொழில் செய்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக அங்கு வசிக்கும் மக்களுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல்களும், பாதிப்புகளும் வருகின்றன. ஏனென்றால் அந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதன் பொருட்டு அங்கு வாழும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. சம்பந்தமில்லாமல் வீட்டை இடிப்பதும், இளைஞர்களை மிரட்டுவதும், பெண்களை அசிங்கமாக பேசுவதுமான விஷயங்கள் அரங்கேறி உள்ளது. இனிமேல் இது போன்ற நிகழ்வு நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்கு வாழும் மக்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதியுடன் வாழ வழிவகை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.

Related Tags :
Next Story