மாவட்ட செய்திகள்

சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது + "||" + Smuggling gold from Saudi Arabia to Chennai; Andhra youth arrested

சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது

சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சாதிக் ஷேக்(வயது 22) என்பவர் வந்தார்.

அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ‘புளூ டூத்’ மூலம் இயக்கப்படும் ஒரு ‘ஸ்பீக்கர்’ பெட்டி இருந்தது. அதை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில் 11 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.38 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஆந்திர வாலிபர் சாதிக் ஷேக்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம், அந்த தங்கத்தை யாருக்காக சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? எனவும் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வானூர் பகுதியில், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
வானூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
2. கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து 4 பேர் கைது
கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது - சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தது, பாகிஸ்தான்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார். சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு பாகிஸ்தான் அடிபணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
4. ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. ஒரத்தநாட்டில் தாய்-மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு பெயிண்டர் கைது
ஒரத்தநாட்டில், தாய்-மகளை சரமாரியாக அரிவாளால் வெட்டிய பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.