மாவட்டத்தில், பலத்த காற்றுக்கு வாழை இலைகள் கிழிந்து நாசம்


மாவட்டத்தில், பலத்த காற்றுக்கு வாழை இலைகள் கிழிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:00 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பலத்த காற்றுக்கு வாழை இலைகள் கிழிந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உப்புக்கோட்டை, 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, திராட்சை ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் திசு வாழை, கற்பூரவள்ளி, நாலிபூவன், நாட்டுவாழை, வயல்காட்டு பழம், ரஸ்தாளி ஆகிய ரக வாழைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் வாழை மரங்களில் இலைகள் கிழிந்து நாசமாகி விடுகின்றன. இவையில்லாமல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் தார் விட உள்ள வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயியிடம் கேட்டபோது, நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,400 வாழை கன்றுகள் சாகுபடி செய்துள்ளேன். கடந்த ஒரு மாத காலமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் இலை கிழிசல் ஏற்பட்டும், மரங்கள் சாய்ந்தும் நஷ்டம் அதிக ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளோம் என்றார். 

Next Story