பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது கேக் சாப்பிட்ட மாணவிக்கு வாந்தி-பேதி; பேக்கரியில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான உணவு பண்டங்கள் பறிமுதல்
பல்லடம் அருகே பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது கேக் சாப்பிட்ட மாணவிக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது. இதையடுத்து பேக்கரியில் விற்பனைக்கு வைத்து இருந்த காலாவதியான உணவு பண்டங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கே.என்.புரத்தை சேர்ந்தவர் துரைபாண்டியன் (வயது 46). இவருடைய மனைவி பத்மா (40). இவர்களுடைய மகன் தங்கதுரை (22), மகள்கள் சாந்தி (17) மற்றும் சாருலதா (6). பிளஸ்-2 முடித்துள்ள மாற்றுத்திறனாளியான சாந்திக்கு லட்சுமி மில் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை வைத்து கொடுத்துள்ளனர். சாருலதா அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சாந்தியின் 17-வது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பெரும்பாளி பகுதியில் உள்ள கீதா பேக்கரிக்கு சென்ற துரைபாண்டியன், அந்த பேக்கரியில் இருந்து 1¼ கிலோ கேக் ரூ.550-க்கு வாங்கிக்கொண்டு வீ்ட்டிற்கு சென்றார்.
பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி சாந்தியின் பிறந்த விழா கொண்டாடப்பட்டது. பின்னர் அந்த கேக்கை சிறிய துண்டுகளாக வெட்டி அங்கிருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. பின்னர் கேக் துண்டுகளை துரைபாண்டியன், பத்மா, தங்கதுரை, சாந்தி, சாருலதா ஆகியோர் சாப்பிட்டனர். நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களும் கேக்கை சாப்பிட்டனர். ஆனால் கேக்கின் சுவை குறைவாக இருந்ததால், பெரும்பாலானவர்கள் வாயில் இருந்து கேக்கை துப்பி விட்டனர். வீட்டிற்கு வந்த உறவினர்களில் கேக் சாப்பிட்ட அனைவரும் வீட்டிற்கு வெளியே சென்றதும் கேக்கை துப்பியதால், அதிர்ச்சியடைந்த துரைபாண்டியன் இது குறித்து உறவினர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது கேக்கில் இருந்து ஒரு வித துர்வாடை வருவதாகவும், இதனால் துப்பி விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டில் மீதி இருந்த கேக்கை துரைபாண்டியன் பிய்த்து பார்த்தார். அப்போது கேக்கின் உள்பகுதி கருப்பு நிறத்திலும், பூசானம் இருந்ததாலும் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கேக் வாங்கிய பேக்கரிக்கு சென்ற துரைபாண்டயன், பேக்கரி உரிமையாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் முறையான பதில் சொல்லாமல் அலட்சியம் செய்ததோடு, அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக பல்லடம் உணவு பாதுகாப்பு அதிகாரி கேசவராஜிடம், துரைபாண்டியன் புகார் செய்தார்.
இதையத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பெரும்பாளி சென்று அந்த பேக்கரியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த கேக்கில் பூசானம் இருப்பதும், அவை நீண்டநாட்களாக இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் காளான், நூடுல்ஸ், குளிர்பானங்கள் ஆகியவை காலாவதியான பிறகும் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதன் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தது ஏன்? என்று பேக்கரி உரிமையாளருக்கு விளக்கம்கேட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீசு கொடுத்தனர்.
இற்கிடையில் பூசானம் பிடித்த கேக்கை சாப்பிட்ட மாணவி சாருலதாவுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story