குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி திரண்ட பொதுமக்கள்; அதிகாரிகள் சமரசப்படுத்தினர்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி திரண்ட பொதுமக்கள்; அதிகாரிகள் சமரசப்படுத்தினர்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:35 AM IST (Updated: 18 Jun 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணகோரி திரண்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

திருச்சுழி,

திருச்சுழி 5-வது வார்டு பகுதியை சேர்ந்தோர் தங்கள் தெருவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரியும் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி சாலை மறியல் செய்ய திரண்ட நிலையில் திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

திருச்சுழி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் மற்றும் போலீசார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் லட்சுமி, தெய்வானை, உமா மகேஸ்வரி, அன்புச்செல்வன் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதி மொழி அளித்தனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் கிடைக்க வழிவகை காணப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story