பொம்மையர்பாளையம் பகுதியில் நீலகிரி கடுவா நடமாட்டமா? வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஆய்வு


பொம்மையர்பாளையம் பகுதியில் நீலகிரி கடுவா நடமாட்டமா? வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2019 5:30 AM IST (Updated: 18 Jun 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

பொம்மையர்பாளையம் பகுதியில் நீலகிரி கடுவா நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஆய்வு நடத்துகிறார்.

புதுச்சேரி,

அழிந்துவரும் வனவிலங்குகளில் ஒன்று நீலகிரி கடுவா ஆகும். இந்த நீலகிரி கடுவா முண்டந்துறை, கேரளா, கோவை வனப்பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

புலி போன்ற உடல் அமைப்பினையும் நாய் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாக இந்த நீலகிரி கடுவா (நாய்ப்புலி) உள்ளது. நாயை விரும்பி சாப்பிடும் விலங்காக இது உள்ளது.

இந்த வனவிலக்கு கடுவா குறித்து கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சியாளர் டிஜோ தாமஸ் (வயது 42) ஆய்வு செய்து வருகிறார். அவர் புதுவையை அடுத்த ஆரோவில் பகுதியில் வந்து வனவிலங்குகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து டிஜோ தாமஸ் கூறியதாவது:–

ஆரோவில், பொம்மையர்பாளையம் பகுதியில் காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, மயில் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்கள் அதிக அளவில் காணாமல் போய் உள்ளன.

இதுதொடர்பாக வனவிலங்கு ஆர்வலர்களிடம் பேசியபோது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீலகிரி கடுவா அந்த நாய்களை வேட்டையாடி இருக்க 80 சதவீத வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் நீலகிரி கடுவாவின் விருப்ப உணவு நாய்கள்தான். நாய்களை வேட்டையாடும் அவை அதை தோளில் சுமந்து சென்று உண்ணும் குணம் படைத்தது.

சிறுத்தை, புலி போன்றவை பெரும்பாலும் நாய்களை உண்ணுவதில்லை. அதே நேரத்தில் நீலகிரி கடுவா நாய்கள், ஆடுகள், கோழிகளை விரும்பி உண்ணும். அவற்றின் கால்தடம் 12 அங்குலம் வரை பதிவாகும்.

அதேபோல் நீலகிரி கடுவா அதிக தூரம் பயணம் செய்யக்கூடியது. வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வந்து நாய்களை வேட்டையாடும். ஆனால் மனிதர்களுக்கு அது எந்த தொந்தரவு தராது. ஆனால் புலி, சிறுத்தை போன்றவை மனிதர்களை கண்டால் விடாது. எனவேதான் பொம்மையர்பாளையம் பகுதியில் நீலகிரி கடுவா நடமாட்டம் இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

உலக அளவில் நீலகிரி கடுவா தமிழகம் மற்றும் கேரளாவில்தான் உள்ளது. அதுவும் 30 என்ற குறைந்த எண்ணிக்கையிலேயேதான் உள்ளது. யூகத்தின் அடிப்படையில்தான் இந்த எண்ணிக்கை சொல்லப்படுகிறது.

இவ்வாறு டிஜோ தாமஸ் கூறினார்.


Next Story