மாவட்ட செய்திகள்

தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The girlfriend is dead mourning Annamalai University student suicide

தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் வடக்கு கவரத்தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் ஆனந்தி (வயது 21). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படித்து வந்தார். அவருடன் கடலூர் முதுநகரை சேர்ந்த நிஷா என்ற மாணவியும் படித்து வந்தார்.


இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிஷா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு ஆனந்தி சென்று வந்தார். அதன்பிறகு தோழி இறந்ததை நினைத்து ஆனந்தி மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். யாருடனும் சரியாக பேசாமலும், சாப்பிடாமலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று ஆனந்தியின் தாய் முதுநகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் என்ஜினீயரின் தாய் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது
காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் மிரட்டியதால் மனமுடைந்த என்ஜினீயர் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
தக்கலை அருகே, மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. சேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
சேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி
கே.ஆர்.பேட்டை தாலுகாவில் முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.