மும்பை மலாடில் பெண் தூக்குப்போட்டு சாவு கணவர் கைது
மலாடில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மும்பை,
மலாடில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மின் விசிறியில்...
மும்பை அந்தேரியில் உள்ள நடன பள்ளியில் வேலை செய்து வருபவர் ராஜ் விஷ்வகர்மா. இவரின் மனைவி ரூபா (வயது 22). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு நேபாளத்தில் திருமணம் நடந்தது. பின்னர் கணவர், மனைவி இருவரும் மும்பை மலாடு சிவ்னேரி சால் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், சம்பவத்தன்று ராஜ் விஷ்வகர்மா கழிவறைக்கு சென்றார். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டது. இதுகுறித்து அவர் ரூபாவிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ரூபாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் அவர் கதவை உடைத்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் ரூபா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தின்தோஷி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கணவர் கைது
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், ரூபாவின் சகோதரர் தின்தோஷி போலீசாரிடம் ராஜ் விஷ்வகர்மா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ராஜ் விஷ்வகர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story