வானவில் : அனைத்து வேலைகளையும் செய்யும் அதிரடி ‘புட் பிராசஸர்’
கிச்சன் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் குசின் ஆர்ட் நிறுவனம் தரம், செயல்திறன் மற்றும் ஸ்டைல் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கருவிகளை தயாரிப்பதில் புகழ்பெற்றது.
குசின் ஆர்ட் நிறுவனத்தின் தயாரிப்பான புட் பிராசஸர் சமையலுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அதி விரைவாக செய்து முடிக்கிறது. 720 வாட் திறன் கொண்ட இதன் மோட்டார் மற்றும் உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுகள் ஆகியவை நீடித்து உழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. பதினான்கு கப் கொள்ளளவு இருப்பதால் அதிக நபர்களுக்கான சமையலை இதை பயன்படுத்தி எளிதாக செய்ய முடியும்.
இந்த புட் பிராசஸர் இயந்திரம் மாவு திரட்டுதல், காய்களை தேவையான வடிவத்தில் துண்டாக நறுக்குதல், சீவுதல், துருவுதல், சட்னி அரைத்தல் என்று சகல விதமான வேலைகளையும் செய்கிறது. ஒரே டச்சில் இது இயங்குவதால் உபயோகிப்பது மிகவும் சுலபம். ஏழு விதமான வேலைகளை செய்வதால் இதனை சமையலறை குதிரை என்று அழைக்கின்றனர். இதன் விலை சுமார் ரூ.12 ஆயிரம்.
Related Tags :
Next Story