வானவில் : உணவு பொருட்களின் காலாவதி தேதியை சொல்லும் ‘சென்டினல் ராப்’
நிறைய சமைங்க, நல்லா சாப்பிடுங்க, ஆனா உணவை விரயமாக்காதீங்க என்று ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஜோதிகா சொல்வது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று.
உணவில்லாமல் பலர் இறந்து கொண்டிருக்கும் போது, பல இடங்களில் உணவு பொருள் வீணாக்கப்படுகிறது. கனடாவின் மேக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உணவின் தன்மையை கண்டறியும் ஒரு சிறிய கண்ணாடி போன்ற பட்டையை கண்டுபிடித்துள்ளனர்.
சென்டினல் ராப் ( SENTINAL WRAP ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய பட்டையை உணவு பொருட்களின் பாக்கெட்களின் மீது ஒட்டி வைத்து விட்டால் அந்த பொருளை எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும், எப்போது காலாவதியாகும் என்பன போன்ற தகவல்களை நமது செல்போனுக்கு அனுப்பி விடுகிறது.
பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் போன்று இதை ஒட்டி வைத்தால் போதும். மிகவும் எளிமையாக இயங்கும் இந்த பட்டையின் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. உணவு பொருட்களின் காலக்கெடுவை கண்டுபிடித்து முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செய்து விடுவதால் அது வீணாகாமல் தவிர்க்க முடிகிறது.
இது மட்டுமின்றி இந்த சென்டினல் ராப்பை மருத்துவ துறையிலும் மருந்துகளின் காலாவதி தேதியைக் கண்டுபிடிக்கப் உபயோகப் படுத்தலாம்.
Related Tags :
Next Story