வானவில் : ஹானரின் 20, 20 புரோ மற்றும் 20ஐ ஸ்மார்ட்போன்கள்


வானவில் : ஹானரின் 20, 20 புரோ மற்றும் 20ஐ ஸ்மார்ட்போன்கள்
x
தினத்தந்தி 19 Jun 2019 6:03 PM IST (Updated: 19 Jun 2019 6:03 PM IST)
t-max-icont-min-icon

செல்பி பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முன் பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர்.

ஹானர் நிறுவனம் ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். கடந்த வாரத்தில் ஒரே நாளில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டது.

குறைந்த, நடுத்தர மற்றும் பிரீமியம் என மூன்று பிரிவினரையும் கவரும் வகையில் அவரவருக்கான விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

ஹானர் 20, ஹானர் 20 புரோ மற்றும் ஹானர் 20ஐ என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

இதில் ஹானர் 20 ஐ-ன் விலை ரூ.14,999 ஆகும். ஹானர் 20 மாடல் விலை ரூ.32,999 ஆகும். ஹானர் 20 புரோ மாடல் விலை ரூ.39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 20 மாடல் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. மிட் நைட் பிளாக் மற்றும் சபையர் புளூ ஆகிய நிறங்களில் இது கிடைக்கும். இதில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளது. இது 6.26 அங்குல புல் ஹெச்.டி. தொடு திரையைக் கொண்டது. இதன் பின்பகுதியில் 48 அங்குல கேமரா உள்ளது. இதில் உள்ள இரண்டாவது கேமரா 16 மெகா பிக்ஸெல்லாகும். இதில் முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும். இது 4 ஜி எல்.டி.இ. இணைப்பு வசதி, வை-பை 802, புளூடூத் வி 5.0, ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. சி போர்ட், விரல் ரேகை பதிவு உணர் சென்சார் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இதன் எடை 174 கிராம்.

ஹானர் 20 புரோ மாடலானது 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. இந்த மாடல் ஒரே ஒரு கலரில் மட்டுமே அதாவது பான்டம் புளூ நிறத்தில் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளது. இது 6.26 அங்குல தொடு திரையைக் கொண்டது. இதில் ஹை சிலிக்கான் கிரின் 980 பிராசஸர் உள்ளது. இதிலும் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளன. அத்துடன் 22.5 வாட் ஹானர் சூப்பர் சார்ஜ் வசதியும் உள்ளது. இதில் பக்கவாட்டில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 182 கிராம்.

பேசிக் மாடலான ஹானர் 20 ஐ மாடல் 4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. கிரேடியன்ட் ரெட், கிரேடியன்ட் புளூ, மேஜிக் நைட் பிளாக் ஆகிய நிறங்களில் இது கிடைக்கும். இது 6.21 அங்குல தொடு திரையுடன் வந்துள்ளது. இதிலும் இரட்டை சிம் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளது. இதில் ஆக்டா கோர் கிரின் 710 எப்.எஸ்.ஓ.சி. உள்ளது. இதன் பின் பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன. இது 24 மெகா பிக்ஸெல் உடையது. பேஸ் அன்லாக் வசதியும் உடையது. முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். விலை குறைந்த மாடலில் இந்த அளவுக்கு அதிக பிக்ஸெல் கொண்ட முன்புற கேமரா வேறு எந்த மாடலிலும் தற்போதைக்கு கிடையாது. இதன் எடை 164 கிராம் ஆகும்.

Next Story