ரூ.6 ஆயிரம் உதவிபெறும் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் கலெக்டர் ராமன் தகவல்
வேலூர் மாவட்டத்தில் ரூ.6 ஆயிரம் உதவி பெறும் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நடப்பு ஆண்டில் பெரு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்று வரும் விவசாயிகள் தவிர்த்து, 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள தகுதியான பெரு விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் விடுபட்ட சிறு, குறு விவசாயிகள், வாரிசுகளுக்கு பட்டா மாற்றம் செய்ததன் காரணமாக இந்த திட்டத்தில் சேராமல் விடுபட்ட விவசாயிகள் ஆகியோரும் பதிவு செய்யலாம்.
இதற்கு தங்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி அவரிடம் உரிய படிவத்தில் ேதவையான அனைத்து விவரங்களையும் வருகிற 30-ந் தேதிக்குள் அளித்து பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story