50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 19 Jun 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத (அதிகபட்ச மானியம் ரூ.25 ஆயிரம் மட்டும்) மானியம் மற்றும் கடன் தொகையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 2018-2019-ம் ஆண்டில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளதை தொடர்ந்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளை சார்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை பெறப்பட்டது.

தற்போது தமிழக அரசு வேலைக்கு செல்லும் பெண்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழை பெண்களை குடும்ப தலைவராக கொண்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மானிய விலையிலான அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால கெடுவை இன்று (வியாழக் கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நாமக்கல் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story