கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ரூ.3¾ லட்சம் மாயம்


கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ரூ.3¾ லட்சம் மாயம்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கியாஸ் ஏஜென்சி நிறுவன லாக்கரில் வைத்திருந்த ரூ.3¾ லட்சம் மாயம் ஆனது.

சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் சீலநாயக்கன்பட்டி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் காசிவிஸ்வநாதன் (வயது 51). இவர் சேலம் ஊத்துக்காடு பகுதியில் தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அலுவலர்கள், ஊழியர்கள், சுமை தூக்குபவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர் சம்பவத்தன்று இரவு வேைல முடிந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்தை அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது லாக்்்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. ஆனால் லாக்கரின் பூட்டோ, அலுவலகத்தின் கதவோ உடைக்கப்படவில்லை.

இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து போலீசார் கூறும்போது, பணம் மாயமான கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தின் கதவோ, பூட்டோ உடைக்கப்படவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் அந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளோம், என்று கூறினர்.

Next Story