கட்டிடத்திற்கு வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை பூட்டிய உரிமையாளர்


கட்டிடத்திற்கு வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை பூட்டிய உரிமையாளர்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தாணிக்கோட்டகத்தில் கட்டிடத்திற்கு வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை உரிமையாளர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மேடு,

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் தகட்டூரை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரது கட்டிடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்தநிலையில் அந்த கட்டிடத்திற்கு கடந்த 5 மாதமாக வாடகை கொடுக்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருடன் பலமுறை நெடுஞ்செழியன் பேச்சுவார்ததை நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.

பரபரப்பு

இதில் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று காலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டியுள்ளார். தொடர்ந்து வழக்கம்போல் அலுவலகத்தை திறக்க வந்த ஊழியர் ரவிச்சந்திரன் அலுவலகம் பூட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை இடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டு பூட்டியது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story