ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், தூக்குப்போடும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், தூக்குப்போடும் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 6:37 PM GMT)

மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்ணாவூரில் நேற்று விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதனை தொடாந்து விவசாயிகள் மரக்கம்பம் நட்டு தூக்குக்கயிறை கட்டி தூக்குப்போடும் போராட்டத்தை நடத்தி னர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சதாசிவம், ஒன்றிய பொருளாளர் திரவியம் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரவள்ளி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

Next Story