அரசு வேலை- ஓட்டல் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர்-பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
அரசு வேலை- ஓட்டல் வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் மற்றும் பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி முத்தரசநல்லூரை சேர்ந்தவர் சாயப்ஜான்(வயது 53). தொழிலதிபரான இவரை, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் அணுகினார். அப்போது அவரிடம் மலேசியாவில் ஓட்டல் ஒன்று விலைக்கு உள்ளதாகவும், அதனை விலைக்கு வாங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறினார்.
இதனை நம்பி சாயப்ஜான் ஓட்டலை விலைக்கு வாங்க முடிவு செய்து, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முன்பணமாக ரூ.8½ லட்சத்தை கொடுத்தார். ஆனால் அதன்பிறகு இஸ்மாயில் ஓட்டலை விற்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சாயப்ஜான் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு பணத்தை தர மறுத்ததுடன், இஸ்மாயில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் சேர்ந்து அவரை மிரட்டி உள்ளனர். இது குறித்து சாயப்ஜான் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் புகார் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இது பற்றி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் இஸ்மாயில், பீர்முகமது உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பொன்னப்பா. இவரிடம், பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த ரமேஷ்(36) என்பவர் அணுகி அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இதனை நம்பி சம்பவத்தன்று பொன்னப்பா பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் நீண்டநாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து அவர் ரமேஷிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். மீதம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொன்னப்பா திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 4-ல் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story