அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 52 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு அடைந்தது. அப்போது 52 பேருக்கு உதவி கலெக்டர் விஷ்ணுசந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி நேற்று 19-ந் தேதியுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
வழக்கத்தை விட நேற்று மனு கொடுக்க வந்தவர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. நேற்று மட்டும் 273 பேர் மனு கொடுத்தனர். மொத்தம் 567 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து மனு கொடுத்த தகுதியான நபர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 16 பேருக்கும், விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 8 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 13 பேருக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா 11 பேருக்கும், பட்டா பெயர் மாற்ற ஆணை 4 பேருக்கும் ஆக மொத்தம் 52 பேருக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். இதுபோக ஏற்கனவே 6 பேருக்கு பட்டா பெயர் மாற்ற ஆணையும், ஒருவருக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அஜிதா, நகர நிலவரித்திட்ட தாசில்தார்கள் கண்ணன், ராஜ மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் சுசீலா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் வினோத், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story