ஜவுளிக்கடைகளில் பெண்களின் உள்ளாடைகள் அணிந்த பொம்மைகளை பார்வைக்கு வைத்தால் நடவடிக்கை மாநகராட்சி சட்ட கமிட்டி உத்தரவு


ஜவுளிக்கடைகளில் பெண்களின் உள்ளாடைகள் அணிந்த பொம்மைகளை பார்வைக்கு வைத்தால் நடவடிக்கை மாநகராட்சி சட்ட கமிட்டி உத்தரவு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் உள்ளாடைகள் அணிந்த பொம்மைகளை வைக்கும் ஜவுளிக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சட்ட கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.

மும்பை, 

பெண்களின் உள்ளாடைகள் அணிந்த பொம்மைகளை வைக்கும் ஜவுளிக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சட்ட கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாடைகளுடன் பொம்மைகள்

மும்பையில் ஜவுளிக்கடைகள் மற்றும் நடைபாதையில் துணி வியாபாரம் செய்பவர்கள் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்வதை விளம்பரப்படுத்தும் வகையில் பொம்மைகளுக்கு உள்ளாடைகளை அணிவித்து பார்வைக்கு வைக்கிறார்கள். வாடிக்கையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருக்கும் இதுபோல ஆபாச பொம்மைகளை பார்வைக்கு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மாநகராட்சியின் சட்ட கமிட்டி சேர்மனும், கவுன்சிலருமான ஷீத்தல் மாத்ரேவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இந்த நிலையில், மாநகராட்சியின் சட்ட கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெண்களின் உள்ளாடைகளை அணிவித்து ஆபாசமாக பார்வைக்கு வைக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுபற்றி சட்ட கமிட்டி சேர்மன் ஷீத்தல் மாத்ரே கூறுகையில், “பெண்கள் தங்களின் உள்ளாடைகளை எங்கு வாங்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதற்கு இதுபோன்ற ஆபாச விளம்பரம் தேவையில்லை. எதையும் நாகரீகமான முறையில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபாசமான முறையில் பொம்மைகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை அணிந்து பார்வைக்கும் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story