திருப்பூர் மாநகரில் 736 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.79 ஆயிரம் அபராதம் வசூல்


திருப்பூர் மாநகரில் 736 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.79 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:35 AM IST (Updated: 20 Jun 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 736 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.79 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நேற்று திருப்பூர் மாநகர் நல அதிகாரி பூபதி, சுகாதார அதிகாரிகள் ராஜேந்திரன், முருகன் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் பி.என்.ரோடு 60 அடி ரோடு, மருதாசலபுரம் பகுதியில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் ஒரு கடையில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். இதுபோல் மற்றொரு மளிகை கடையில் இருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

இதுபோல் மாநகர் முழுவதும் நேற்று 85 கடைகளில் சோதனை நடத்தினார்கள். இதில் 736 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மொத்தம் ரூ.79 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். 19 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.


Next Story