செந்துறை அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு
செந்துறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கஞ்சமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகன்கள் வெங்கடேசன்(வயது 33), வளரழகன்(29). வெங்கடேசன் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளராக வேலை பார்க்கிறார். வளரழகன் இந்து முன்னணி செந்துறை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர்களுக்கும், இவர்களின் உறவினரான மாயவேலுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாயவேல் வழக்கு தொடர்பாக வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பாகியது.
அப்போது மாயவேல் கல்லால் வெங்கடேசன் தலையை தாக்கினார். இந்த தாக்குதலில் வெங்கடேசன் மண்டை உடைந்ததாக தெரிகிறது. உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வளரழகன் தனது வயலில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாயவேலின் மறு மகன்களான இடையக்குறிச்சி செந்தில் கண்டியங்கொல்லை ரவி உள்ளிட்ட சிலர் வளரழகன் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த வளரழகன் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து செந்தில் மற்றும் ரவி ஆகியோரை வெட்டியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து செந்திலின் உறவினர்கள் இடையகுறிச்சியில் இருந்து 20–க்கும் மேற்பட்டோர் வந்து ஜோதிமணியின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அங்கிருந்த ஜோதிமணியையும் கடுமையாக தாக்கினர். இந்த மோதல் குறித்து தகவலறிந்த குவாகம் போலீசார் விரைந்து வந்து ஜோதிமணியை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த மோதலில் காயமடைந்த ஜோதிமணி தரப்பினர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மாயவேல் தரப்பினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஜோதிமணி மகன் வளரழகன் மீதும், மாயவேல் தரப்பினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து குவாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வெளியூர்களில் ஆட்கள் கொண்டு வந்து இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதோடு வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story