திருப்பூரில் செயற்கைகோள் உதவியுடன் நில அளவை பணி


திருப்பூரில் செயற்கைகோள் உதவியுடன் நில அளவை பணி
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் செயற்கைகோள் உதவியுடன் நில அளவை பணி நடந்து வருகிறது.

திருப்பூர், 

தமிழக அரசின் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் நில அளவை பிரிவில், நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. காகிதங்களில் உள்ள ஆவணங்கள் அழியும் அபாயம் உள்ளதால் அவற்றை கணினியில் பதிவு செய்யப்பட்டது. சங்கிலி மூலமாக நில அளவை செய்யும் முறை மாறி ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளவீடு செய்யும் தொழில் நுட்பம் வந்தது. தற்போது நில அளவை பணி அதிநவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி செயற்கைகோள் உதவியுடன் துல்லியமாக நில அளவை செய்யும் டி.ஜி.பி.எஸ்.(வேறுபட்ட பூகோள நிலைப்படுத்துதல் அமைப்பு) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஜி.பி.எஸ். முறைக்கும் மேம்பட்ட டி.ஜி.பி.எஸ். என்ற செயற்கைகோள் உதவியுடன் நில அளவை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் அறிமுகமான இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் மாதிரி நில அளவை பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் இந்த மாதிரி நில அளவை பணி நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்பட உயரமான கட்டிடங்களின் மாடியில் இருந்து நவீன கருவிகளை அமைத்து செயற்கைகோள் உதவியுடன் நில அளவை பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் உள்பட தமிழகத்தின் 18 நகரங்களில் சோதனை முறையில் நில அளவை பணி நடந்து வருகிறது. அந்த அளவீடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இனிமேல், ஆன்லைன் மூலமாக நில விவரங்களை துல்லியமாக அறிய முடியும் என்று தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story