ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி. கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புதிய உறுப்பினர் சேர்க்கை அட்டைகளை வினியோகிப்பது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் பேசினார். அதனை தொடர்ந்து பூண்டி.கலைவாணனுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மனித சங்கிலி போராட்டம்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு அயராது பாடுபட்ட உதயநிதி ஸ்டாலினை மாநில இளைஞரணி அமைப்பாளராக நியமிக்க வேண்டும். வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டத்தை வெற்றி கரமாக நடத்துவது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. எனவே மக்களுக்கும், கல்வி கற்கும் மாணவர்களுக்கும் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளையும், மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலு, எம்.எல்.ஏ.க்கள் கீழ்வேளூர் மதிவாணன், திருத்துறைப்பூண்டி ஆடலரசன், மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்திக் கலைவாணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story