ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இந்துமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி வட்டாரங்களில் செயல்படும் 54 ரேஷன் கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி, கோதுமை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது தெரியவந்தது.
அபராதம்
அதன்படி, 100 கிலோ அரிசி, 71 கிலோ சீனி, 45 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் சிறப்பு பொதுவினியோக திட்ட பொருட்கள் ரூ.12 ஆயிரத்து 650 வரை முறைகேடாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 75 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story