மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு + "||" + Students opt for a statewide netball tournament

மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர் களுக்கான மாநில அளவிலான நெட்பால் போட்டி வருகிற ஜூலை மாதம் 29, 30-ந் தேதிகளில் தத்தனூர் எம்.ஆர்.சி. வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மாணவர்கள் தேர்வு ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலைக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவிலுக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
2. பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
பெருநாவலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி
சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
4. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. நாகர்கோவிலில் 4 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.