போலீஸ் அதிகாரி அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை நாமக்கல் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.
முசிறி,
நாமக்கல் பகுதியை சேர்ந்த மூத்த வக்கீல் ராவணன் வழக்கு விசாரணை தொடர்பாக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் லதா, அவரை மரியாதை குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை நாமக்கல் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் முற்றுகையிட்டனர். பின்னர் துணை சூப்பிரண்டு தமிழ்மாறனிடம் தொட்டியம் சப்-இன்ஸ்பெக்டர் லதா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

Related Tags :
Next Story