மாவட்ட செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே, காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது + "||" + The mother of the girlfriend Youth arrested for stabbing knife

பெரியநாயக்கன்பாளையம் அருகே, காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே, காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெ.நா.பாளையம்,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் தாமோதிரசாமி. இவருடைய மகன் தனுஷ்குமார் (வயது 19). இவர் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பள்ளி முடித்த பின்னரும் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் செல்போனிில் அடிக்கடி பேசி வந்தனர். இதை அறிந்த மாணவியின் வீட்டினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாணவியின் தாயார், தனுஷ்குமாரை ஜோதிபுரம் அருகே சந்தித்து தனது பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தனுஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் தாயை குத்தினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தனுஷ்குமார் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
2. சீனாவில் பயங்கரம்: பள்ளிக்கூடத்தில் புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 8 மாணவர்கள் பலி
சீனாவில் தொடக்கப்பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 மாணவர்கள் பலியாகினர். வெறிச்செயலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3. மதுகுடிக்க பணம் கேட்டதில் தகராறு: வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
மதுகுடிக்க பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் குளித்தலை கோர்ட்டு 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
4. சீனாவில் ஹாங்காங் நடிகருக்கு கத்திக்குத்து
சீனாவில், ஹாங்காங் நடிகர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது.
5. குடும்ப தகராறில் மைத்துனருக்கு கத்திக்குத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
குடும்ப தகராறில் மைத்துனருக்கு கத்திக்குத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு.