நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா


நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-22T01:21:30+05:30)

நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று நாடெங்கும் யோகாசனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல இடங்களில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் மற்றும் சமூக அமைப்புகள் யோகாசனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதே போல் தென்காசி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் யோகா பயிற்சியாளரின் அறிவுரைப்படி சூர்ய நமஸ்காரம், சக்கராசனம், ஏகபாத ஆசனம், வீரபத்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.

தென்காசி நகர பா.ஜ.க. சார்பில் காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு நேற்று காலை யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, சண்முகசுந்தரம், பா.ஜ.க. நகர தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் முத்துகிரு‌‌ஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம்

குற்றாலம் நகரப்பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை செல்வலட்சுமி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை செல்வலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி ஆசிரியர் ராமராஜா, திருமூலர் யோகா பீடத்தின் ஆசிரியர் மணிகண்ட சுவாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் குற்றாலம் பா.ஜ.க. நகர தலைவர் செந்தூர்பாண்டியன், பொதுச்செயலாளர் பிலவேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி சுதாகர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பீட்டர் ஜெகதீ‌‌ஷ் போஸ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் காதர்மீரான், சுடர்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைதீன் பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். என்.சி.சி. அலுவலர் சண்முகசுந்தரம், என்.எஸ்.எஸ். அலுவலர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) சரவணன் முன்னிலையில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்றுனர் முருகன், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி மரியசெல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு, உடற்கல்வி ஆசிரியர் ப‌ஷீர் அகம்மது மீரான் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story