23 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த 23 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரிந்து வரும் இன்ஸ்பெக்டர்கள் 23 பேர் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அரக்கோணம் தாலுகாவிற்கும், வேலூர் தெற்கு (சட்டம் மற்றும் ஒழுங்கு) இன்ஸ்பெக்டர் அழகுராணி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குற்ற தனிப்படை பிரிவில் பணியாற்றிய பத்மாவதி திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆம்பூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தமிழரசி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புனிதா செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பேபி போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தெள்ளார் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சத்துவாச்சாரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வேலூர் வடக்குக்கும், தண்டராம்பட்டு முரளிதரன் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், தேசூர் ஜெயப்பிரகாஷ் ஆரணி தாலுகாவுக்கும், ஆரணி தாலுகாவில் பணியாற்றிய பாரதி அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், செய்யாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேகாமதி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வந்தவாசி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், போளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா வேலூர் மாவட்ட குற்ற தனிப்படை பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேேபால ஆரணி மகளிர் இன்ஸ்பெக்டர் மைதிலி திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், செங்கம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அபர்னா செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் அமுதா திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் திருமால் வேலூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தண்டராம்பட்டுவுக்கும், திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்ெபக்டர் தனலட்சுமி தெள்ளாருக்கும், வேலூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தேசூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story