நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2019 3:00 AM IST (Updated: 22 Jun 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செல்வகுமார், பொருளாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் மீண்டும் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துமாரி, சத்யவாணி, செம்மலர், கற்பகம், மகா அரிச்சந்திரன், மணிகண்டன், சண்முகராஜா, அய்யாத்துரை, அயூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி-ஆலங்குளம்

சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகிரி வட்ட கிளை தலைவர் இந்துமதி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் முத்துசெல்வன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்ட தலைவர் சுதர்சன், வட்ட செயலாளர் சேர்மபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கார்த்திகை ராஜன் நன்றி கூறினார்.

Next Story