தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆடு, மாடு கொட்டகை அமைத்து தரவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆடு மற்றும் மாடு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை,
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என்பதற்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் சிறப்பு முகாம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கே.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் டி.கிரி, உதவி செயற்பொறியாளர் எம்.ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் விசாயிகளிடம் இருந்து வரப்பு அமைத்தல் பணிக்கு 255 மனுக்களும், பண்ணைக் குட்டை அமைத்தல் பணிக்கு 17 மனுக்களும், தென்னை மரத்தை சுற்றி வட்டப்பாத்தி அமைத்தல் பணிக்கு 258 மனுக்களும், தனிநபர் உரக்குழி அமைத்தல் பணிக்கு 14 மனுக்களும், அசோலா பூஞ்சை வளர்ப்பு பணிக்கு 6 மனுக்களும், கல் வரப்பு அமைத்தல் பணிக்கு ஒரு மனுவும், கால்நடை தண்ணீர் தொட்டி அமைத்தல் பணிக்கு 44 மனுக்களும், மாட்டுக்கொட்டகை அமைத்தல் பணிக்கு 79 மனுக்களும், திறந்த வெளிக் கிணறு பணிக்கு 6 மனுக்களும் குவிந்தன.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஆட்டுக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை அதிக அளவில் அமைத்துத் தரவேண்டும் என்றும், தென்னந்தோப்புகளுக்குள் உள்ள தென்னை ஒலைகள் மக்கும் வகையில் குழிகள் அமைத்துத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Related Tags :
Next Story