மோட்டார் சைக்கிள்கள் மோதல்: போலீஸ் ஏட்டு பலி போலீசார் விசாரணை
நாகையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் கோவில் கண்ணாப்பூர் ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 44). இவர் நாகையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பாலையூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, எதிரே நாகை நூல்கடை பகுதியை சேர்ந்த பஷீர் அகமது (48) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக உலகநாதன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக உலகநாதனை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உலகநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான போலீஸ் ஏட்டு உலக நாதனுக்கு கோமதி என்ற மனைவியும், பாலாஜி, ஹரி என்ற 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

Related Tags :
Next Story