குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகத்திற்கு மத்திய அரசு உதவும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகத்திற்கு மத்திய அரசு உதவும் என திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி,
சர்வதேச யோகா தினத்தை பற்றி ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி பழமையான கட்சி. அதன் தலைவராக இருப்பவர் நம்முடைய பண்பாடு, கலாசாரம் பற்றி தெரியாமல் இருக்க கூடாது. தமிழை வைத்து தி.மு.க. அரசியல் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழி நமது தாய் போன்றது.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது முன்கூட்டியே இருந்து வருகிறது. ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அண்டை மாநிலத்தினர் தண்ணீர் கொடுக்க முன்வந்தால் அதனை வாங்கி கொள்ள வேண்டும்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகத்திற்கு மத்திய அரசு உதவும். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். தி.மு.க. எம்.பி.க்கள் தங்களது சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்ததற்கு எனது (பொன்.ராதாகிருஷ்ணன்) சொத்துகளை முதலில் விற்கவேண்டும் என திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். அவர் கூறிய நாள் முதலே எனது சொத்து பட்டியலை நான் கையில் தயாராக வைத்துள்ளேன். அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story