மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் திருமாவளவன் எம்.பி. பேட்டி
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சீர்காழியில், திருமாவளவன் எம்.பி. கூறினார்.
சீர்காழி,
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப முயற்சித்தேன். ஆனால் முழுமையாக பேச அனுமதிக்கவில்லை. மத்திய அரசு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
இதேபோல் தமிழக அரசு சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாகத்திற்கான நிதியை...
குடிநீர் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி நாளை(அதாவது இன்று) கடலோர டெல்டா மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். மழை வேண்டி தமிழக அரசு யாகம் செய்வதற்காக செலவு செய்யும் நிதியை குடிநீருக்கு பயன்படுத்தலாம்.
வெளிமாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தர தயாராக இருந்தும் தமிழக அரசு அதை வாங்குவதற்கு ஏன் தயங்குகிறது?. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறாமல் யாகம் வளர்ப்பது வேதனைக்குரியது.
விரைவில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி ஒருமித்த முடிவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றி உள்ளார். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை ஆபத்தானது. தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story