திருவாரூர் மாவட்டத்தில், 4 இடங்களில் மழை வேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மழை வேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டார்.
கொரடாச்சேரி,
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவில், நன்னிலம் கோவில் திருமாளத்தில் உள்ள மங்களநாதசாமி கோவில், மன்னார்குடி அருகே பாமணி நாகநாதசாமி கோவில், திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் ஆகிய 4 இடங்களிலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வருணேஸ்வரர் சன்னதி முன்பு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூர்ணாகுதியும், தீபாராதனையும், அபிஷேகமும் நடந்தது.
அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
இந்த யாகத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பொன்.வாசுகிராமன், மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-
மழை வேண்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவிலில் வருணேஸ்வரர் சன்னதி, நன்னிலம் கோவில் திருமாளத்தில் உள்ள மங்களநாதசாமி கோவில், மன்னார்குடி அருகே உள்ள பாமணி நாகநாதசாமி கோவில், திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் ஆகிய 4 இடங்களில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story