ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி போராட்டம்


ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் விளிம்புநிலை மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மேலவீதியில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் முதல் தென்கீழ்அலங்கம் வரை அகழி உள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழியை தூர்வாரி, அகழி கரையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக செக்கடி, மேலஅலங்கம், வடக்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அகழிகரையில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் விளிம்புநிலை மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மேலவீதியில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விளிம்புநிலை மக்கள் விழிப்புணர்வு இயக்க நிறுவன தலைவர் முத்துமாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் கருப்பு கொடிகளும் கட்டப்பட்டிருந்தது.

Next Story